அந்த எண் எது?

அந்த எண் எது?இது உங்களுக்கில்லை. தைரியமா வாங்க!

  பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டுவிட்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் வாண்டுகள் அட்டகாசம் ஆரம்பித்திருக்கும் எப்போதும் கம்ப்யூட்டர் விளையாட்டு, டிவி என்று  பொழுது போக்கிக் கொண்டிருப்பார்கள் சில  குழந்தைகள். நமக்கு தொந்தரவு தராமல் எது செய்தாலும் சரின்னு விட்டு விடாமல் அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். வெளியிலும்  ஓடி ஆடும் விளையாட்டுக்களை விளையாடச் சொல்லுங்கள். விழுந்துடுவார்கள் என்று பயப்படாதீர்கள்.. சின்ன சின்ன சுற்றுலா அழைத்து செல்லுங்கள் சினிமாவிற்கு போகாமல் இருத்தல் நலம்.. 

   அவர்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வேலை கொடுங்கள். புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்லலாம். அவர்களுடைய மூளைக்கு வேலை கொடுக்கிற விதமாக சில புதிர் கணக்குகளைக் கொடுங்கள். 

  அப்படி ஒரு எளிமையான ஒரு கணக்கை சொல்கிறேன். இதை எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கலாம். உங்கள் தம்பி தங்கைகள்,குழந்தைகள்,பேரன் பேத்திகள் இந்த வயதில் இருந்தால் அவர்களுக்கு இந்த புதிராக சொல்லி கண்டு பிடிக்க சொல்லுங்கள் சரியான விடை சொன்னால் பாராட்டுங்கள். சின்ன பரிசு ஏதாவது கொடுங்கள்.கண்டு டிக்க முடியவில்லை என்றால் குறிப்புகள் கொடுத்து முயற்சி செய்ய சொல்லுங்கள் . இவை அவர்களது சிந்தனை திறனை வளர்க்கும். 
(புதிர்ல ஆர்வம் இல்லாதவர்கள் கடைசியில இருக்கிற கொசுறு செய்தியை படிச்சிட்டு எஸ்கேப் ஆகலாம்)

 
இதோ அந்தப் புதிர் கணக்கு
அந்தப் பையன் ஓடி வந்தான் தன் அக்காவை நோக்கி,
“அக்கா! அக்கா!நான் ஒரு ஒரு அதிசய நம்பரை கண்டு பிடிச்சிருகேன்.”
“அப்படியா! வெரிகுட்! என்ன அது சொல்லு!”
“நான் சொல்ல மாட்டேன்.  நீங்க தான் சொல்லணும்.
அந்த எண்ணை எந்த இரண்டு இலக்க எண்ணாலும் பெருக்கினாலும் இரண்டிலக்க எண்ணை இருமுறை பக்கத்தில பக்கத்தில எழுதி இருக்கிற மாதிரி இருக்கிற  நான்கு இலக்கஎண்ணா இருக்கும்.
“புரியலடா!தெளிவா சொல்லு”
“அதாவது 91 இருக்குன்னு வச்சுக்கோ அதை அந்த எண்ணால் பெருக்கினால் 9191 ன்னு கிடைக்கும்..புரியுதாக்கா? 10நிமிஷம்தான் டைம் .அதுக்குள்ள அந்த எண் என்னன்னு கண்டு புடிச்சி சொல்லணும். கேல்குலேட்டர் பயன்படுத்தக்கூடாது ஓ.கே யா? 
அக்கா  விடை கரெக்டா பத்து நிமிஷத்துகுள்ள சொல்லிட்டாங்களா? 
உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா நீங்களும் சொல்லலாம்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

புதிர் விடை

அந்த எண் 101 
எப்படி?
உதாரணத்திற்கு 17 எடுத்துக் கொள்ளுங்கள்  17 x 101 = 1717
எந்த இரண்டு இலக்கஎண்ணை எடுத்துக் கொள்கிறோமோ அது இரண்டு முறை எழுதப்பட்ட நான்கு இலக்க எண்ணாக மாறிவிடும் 101ஆல் பெருக்கும்போது.

இதை  எப்படி கண்டு பிடிப்பது 
வழி: 1 
எடுத்துக்காட்டுக்கு 51   இதை அந்த எண்ணால் பெருக்கும்போது 5151 என்று வர வேண்டும். அப்படியானால் 5151 ஐ 51 ஆல் வகுத்தால் கிடைப்பது 101. 
எல்லா இரண்டிலக்க எண்களுக்கு இது பொருந்தும்.

வழி: 2 
இந்த  அமைப்பை கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ள முடியும் 
கொடுத்துள்ள  நிபந்தனைப் படி 

இரண்டிலக்க எண்                பெருக்கல்பலன் 

31          x      ——–                 3131
25          x      ——-                  2525
46          x      ——-                  4646

பெருக்கல்  பலன் இரண்டிலக்க என்னை விட100 மடங்குக்கு மேல் இருப்பதை காணலாம். 31 ஐ 100 ஆல் பெருக்கினால் 3100 அதனுடன் அதே 31 கூட்டினால் 3131 அதாவது 101 மடங்கு.

வழி 3

இந்த முறை அல்ஜீப்ரா பயன்படுத்தி விடை காண்பது. யாரேனும் கேட்டால் சொல்கிறேன்.
இதனை பயன் படுத்த அறிந்து கொண்டால் பல கணக்குகளுக்கு தீர்வு காண முடியும்.
*********************************************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s