கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!

ஆபீஸ் மேனேஜர்: ஜெய்ப்பூர் சென்னையில இருந்து எவ்வளோ தூரம் ?
கூகுள்தாசன்: கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன் சார்!

நண்பன்:  சேதன் பகத் கடைசியா எழுதின புத்தகம் என்னப்பா?
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

நண்பர்:  அம்மா உணவகம் எக்மோர்ல இருக்கா?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

ஊருக்கு போன மனைவி(கைபேசியில்): ஹலோ என் தம்பி குழந்தைக்கு நாமதான் பேர் வைக்கனுமாம் குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

மகன்: சயின்ஸ் ப்ராஜெக்ட் ஒண்ணு பண்ணணுமாம்?என்னப்பா பண்றது?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
  
தங்கை: பரதேசி படம் எங்க ஓடுது சொல்லு:
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
  
தாத்தா: திருப்பதில பிரம்மோற்சவம் எப்போ?:
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன். 
  
அக்கா:தங்கம் விலை இன்னைக்கு என்ன?
கூகுள்தாசன்:கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

பாட்டு கற்றுக்கொள்ளும் மகள்; இந்த பாட்டு என்ன ராகம்?
கூகுள்தாசன்: கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
  
அப்பா: இந்த மருந்து இங்க கிடக்கல/எங்க கிடைக்கும்னு தெரியலையே?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
  
அம்மா: ஊருக்கு போன உன் பொண்டாட்டி எப்ப வருவா?
கூகுள்தாசன் : இரும்மா  கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s