கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.

இண்டர்நெட் வேகம் சில நேரங்களில் அதிகமாக இருக்கிறது சில நேரங்களில் குறைவாக இருக்கிறது என்பது தான் பல பேரின் கேள்வி இந்தப்பிரச்சினைக்கு தீர்வாக எல்லா நேரங்களிலும் இண்டர்நெட் வேகத்தை ஒரே மாதிரியாக இருப்பது போல் செய்யலாம் நமக்கு உதவ கூகிள் DNS சர்வர் உள்ளது.

நம் கணினியில் உள்ள DNS எண்ணை மாற்றி கூகிள் சர்வரின் எண்ணை எப்படி சேர்க்கலாம் என்பதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம். முதலில் My Network Places சென்று Local Area Connection என்பதின் மேல் வைத்து Right Click செய்து வரும் திரையில் ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) Properties என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் Internet Protocol (TCP/IP) என்பதை தேர்ந்தெடுத்த பின் Properties என்பதை சொடுக்கவும் வரும் திரையில் படம் 2ல் காட்டியுள்ளபடி Use the following DNS Server Addresses என்பதில் முதலில் இருக்கும் Preferred DNS Server என்பதில் 8.8.8.8 என்பதையும்  இரண்டாவதாக இருக்கும் Alternate DNS Server என்பதில் 8.8.3.2 என்பதையும்  கொடுத்து OK என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கவும். இனி கணினியை ஒரு முறை Restart செய்து பார்த்தால் இண்டர்நெட் வேகம் அதிகமாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்கும்
நன்றி:http://www.winmani.com