பயணிகள் விரும்பும் அதி நவீன சொகுசு (மல்டி ஆக்சல் வால்வோ) @பருந்துகள் இயக்கும் திட்டம், வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதி நவீன சொகுசு பேருந்துகள், கழிப்பறை, “ஏசி, டிவி’ உள்ளிட்ட வசதிகளுடன் , கூடுதல் டயர்களுடன், நீளமான பேருந்தாக காட்சியளிக்கின்றன.அனைத்து சொகுசு வசதிகளையும் உள்ளடக்கியும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்படும், இந்த வகை பேருந்துகளை, நீண்ட தூரம் செல்லும் பயணிகள், அதிகம் விரும்புகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற நகரங்களில் இருந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, ஆம்னி பேருந்து நிறுவனங்கள் இயக்கி,

பயணிகளை கவர்ந்துள்ளனர்.தனியார் பேருந்துகளுக்கு போட்டியாக, இந்த வகை பேருந்துகளை, கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்தினரும் களத்தில் இறக்கினர். தனியாருக்கு நிகரான பயணக்கட்டணம் வசூலித்த போதிலும், இந்த வகை பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.சொகுசு, அதிசொகுசு மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய, 994க்கும் மேற்பட்ட பேருந்துகளை, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரளாஆகிய தென் மாநிலங்களுக்கு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.தனியார் சொகுசு பேருந்து போல, பயணிகளுக்கு கூடுதல் வசதிகளுடன், அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகளில் உள்ள வசதிகள் மற்றும் சேவை

இதை கருத்தில் கொண்டு, அதி நவீன சொகு” பேருந்துகளை இயக்க, போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது. இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.இந்த சூழ்நிலையில், தமிழக அரசின், வரும் பட்ஜெட்டில், பயணிகளை கவரும் வகையில், அதி நவீன சொகுசு பேருந்துகளை இயக்கும் திட்டம் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து,போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதி நவீன வசதியுள்ள, ஒரு பேருந்தின் விலை மட்டுமே, 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆகிறது.தினமும் குறைந்த பயணிகளுடன், இந்த வகை பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை. வார விடுமுறை, பண்டிகை, கோடை விடுமுறை உள்ளிட்ட நாட்களில் மட்டும் இயக்கியும், மற்ற நாட்களில் வாடகைக்கு விட்டும் வந்தால், போதிய லாபத்தை ஈட்ட முடியும். பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தொடர்ந்து இயக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s