கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எந்த வகையான சத்துக்கள் தேவை !!!


கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின்
கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும்.
எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில்
இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும்.
உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும்,
பெண்களுக்கு ஆண்களை விட அதிக அயன
இரும்பு சத்து தேவை. கர்ப்ப காலத்தில் போதிய
இரும்பு சக்தி கிடைக்காவிடில், சிக்கல்கள் ஏற்படலாம்.
பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல்,
செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின்
உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம்
பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின்
தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த
கூழ் பசையை தினமும் காலையில்
மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும் கறுப்பு எள்
இரும்புச்சத்து நிறைந்தது.
இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2
மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி,
சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும். தேன்
அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து. பூசணிக்காய்
இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும்.
எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது. வெங்காயமும்
சோகைக்கு மருந்தாகும். பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள்
சோகையை போக்கும்.
கர்ப்ப காலங்களில் கால அட்டவணைப்படி நேரத்திற்கேற்ப
நன்கு சாப்பிட வேண்டும். சரியான உணவு மற்றும் சத்தான
உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமாகும்.அதுதான்
சிசுவுக்கும் தாய்க்கும் சிறந்ததாகும்.
கருத்தரித்த ஆரம்பத்தில் இருந்தே கொழுப்பு நிறைந்த
உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த
உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட
நேரிடும். கர்ப்பிணிப் பெண்கள் தளர்வான ஆடைகளையே அணிய
வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவதன் மூலம்
இயல்பாக மூச்சு விட முடியாது. குழந்தைக்கும் அதிக
அழுத்தம் தரக்கூடும். அதனால் இறுக்கமான ஆடைகளைத்
தவிர்க்கலாம். நீங்கள் கர்ப்பம் தரித்த காலத்தில் அதிக
வேலைகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். குறைந்த
அளவு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்.
மாதா மாதம் கண்டிப்பாக மருத்துவமனை சென்று இரத்தப்
பரிசோதனை செய்வது மிக அவசியம். இரத்தப்
பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள
முடியும். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள்
இருக்கையில் அமர்ந்து வேலை செய்து விட்டு எழும்பும்
போது கவனமாக எழ வேண்டும். வயிற்றில் ஏதேனும் அடிக்க
நேரிடும்.
இயல்பாக கா்ப்பிணிப் பெண்களுக்கு மயக்கம் வருவது இயல்பு.
அதனால் தனியாக வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர்ப்
போத்தல் அல்லது ஜுஸ் எடுத்துச் செல்ல வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s