ஆடம்பர விமான வசதி அதிநவீன சொகுசு பஸ்

Ashok Leyland Luxura Magical bus

தனியார் ஆடம்பர, “ஜெட்’ விமானங்களில் உள்ளது போன்ற, அதிநவீன வசதிகள் கொண்ட, ஆடம்பர பஸ், டில்லியில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

விமானங்களில் உள்ள வசதிகளை போலவே, பஸ்களிலும் இருக்காதா என, ஏங்கும் சாதாரண பயணிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில், டில்லியில், அதிநவீன வசதியுடன் ஆடம்பர பஸ் இயக்கப்பட உள்ளது.அசோக் லேலேண்ட் நிறுவனமும், “டூ பிள்ல்ஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பும் இணைந்து, இந்த ஆடம்பர பஸ்சை உருவாக்கியுள்ளன. இந்த பஸ்சிற்கு, “அசோக் லேலண்டு லக்சுரா மேஜிக்கல் இந்தியா’ என, பெயரிடப்பட்டுள்ளது.இந்த பஸ்சில், குளிர்விக்கப்பட்ட மற்றும் சூடான உணவு வகைகள், நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், குளியலறை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற பல அதிநவீன வசதிகள் உள்ளன.

ஒன்பது பேர் பயணிக்க கூடிய இந்த ஆடம்பர பஸ்சின் வடிவமைப்பாளர், திலீப் சாப்ரியா கூறியதாவது:ஆடம்பர, தனியார், “ஜெட்’ விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளை போல, இந்த பஸ்சில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பேர் பயணிக்க முடியும் இந்த வாகனத்தில், விமானத்தை விட குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.காலையில் டில்லியில் இருந்து புறப்பட்டு, ஆக்ரா சென்று, அன்று மாலையிலேயே டில்லி திரும்ப, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.இவ்வாறு திலீப் சாப்ரியா தெரிவித்தார்.

டில்லியை சேர்ந்த மான் டிராவல்ஸ், இந்த ஆடம்பர பஸ்சை சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், இந்த ஆடம்பர பஸ், டில்லியிலிருந்து இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s