பேஸ்புக்கில் Tag செய்வதை தடுக்க

பேஸ்புக்கில் பிறர் நம்மை டேக் செய்வதை தடுப்பது எப்படி? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதில், “தடுக்க முடியாது” என்பது தான். ஆனால் நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் நம் அனுமதி இல்லாமல் நம் டைம்லைனிலோ, நண்பர்களுக்கோ தெரியாமல் செய்ய வைக்கலாம்.

பேஸ்புக்கில் டேக் செய்வதை தடுக்க:

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account Settings என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே இடதுபுறம் Timeline and Tagging என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கே Who can add things to my timeline? என்ற இடத்தில், இரண்டாவதாக உள்ள Review posts friends tag you in before they appear on your timeline?என்பதை க்ளிக் செய்தால் மேலே உள்ள படம் போல இருக்கும். அதில் Enabledஎன்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!
இனி யாராவது உங்களை டேக் செய்தால் அது பற்றி உங்களுக்கு அறிவிப்பு வரும். அதை க்ளிக் செய்தால் Timeline Review பகுதிக்கு செல்லும்.
அங்கே இரண்டு பட்டன்கள் இருக்கும். Add to Timeline என்பதை க்ளிக் செய்தால் உங்கள் டைம்லைனில் தெரியும். Hide என்பதை க்ளிக் செய்தால் தெரியாது.
இந்த வசதி இருந்தாலும், அந்த போட்டோ அல்லது ஸ்டேட்டஸில் உள்ள உங்கள் டேக் அப்படியே தான் இருக்கும். அதனை நீக்க விரும்பினால் பேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி  என்ற பதிவில் உள்ளபடி செய்யவும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s