உலகளாவியரீதியிலான சில திருமண பாரம்பரியங்கள்….!

 

பெப்ரவரி, 2வது ஞாயிற்றுக்கிழமை – உலக திருமண தினம்

உலக திருமண தினமானது 1986ம் ஆண்டிலிருந்து, பெப்ரவரி மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படுகின்றது.
இந்த வருட உலக திருமண தினம் இன்றாகும்.(2013/02/10)
அந்த வகையில், உலகளாவியரீதியிலான சில திருமண பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக.
۞۞ மொங்கோலிய நாட்டில் “டாவூர்” இன குழும மக்கள் திருமண திகதியை நிச்சயிப்பதற்காக வித்தியாசமானதொரு பாரம்பரிய முறையினை கைக்கொள்கின்றார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் கோழியொன்றினைக் கொலை வேண்டும். பின்னர் அவர்கள், உயிரற்ற கோழியின் உடற்பாகத்தினை வெட்டி அதன் ஈரலினை பரிசோதிக்க வேண்டும். அந்த ஈரல் ஆரோக்கியமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்குமானால் தம்பதிகளின் திருமணத் திகதி அறிவிக்கப்படும். அவ்வாறு இல்லையேல், ஆரோக்கியமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் உள்ள கோழி ஈரலினை கண்டுபிடிக்கும்வரை அவர்கள் இந்த செயற்பாட்டினை மீண்டும் செய்ய வேண்டுமாம்.
۞۞ கொங்கோ நாட்டில் நடைபெறும் பாரம்பரிய திருமணங்களில் கலந்துகொள்ள நகைச்சுவையாளர்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில், திருமண வைபவம் தொடங்கியதிலிருந்து முடிவடையும் வரை மணமகன், மணமகள் ஆகியோர் சிரிப்பதற்கு அனுமதியில்லையாம்.
۞۞ குண்டாகுங்கள் இல்லையேல் திருமணம் இல்லை. 


நைஜீரிய நாட்டில் “எஃபிக்” இனக் குழும இளம்பெண்கள் பூப்படைந்த பின்னர், அங்கே வயதான பெண்களினால் பராமரிக்கப்படும் “கொழுக்கும் இல்லங்களில்” நுழைந்துகொள்கின்றனராம். அவர்கள் பெரும்பாலும் தமது நேரத்தினை தொடர்ச்சியாக உண்பதிலேயே செலவிடுகின்றனராம். பின்னர் அவர்கள் அதிபார நிலையினை அடைந்த பின்னர், திருமணத்திற்கு பூரண தகுதியுடையவர்கள் என்ற நிலையினை அடைந்தவர்களாக கருதப்படுகின்றார்கள்.
۞۞ சீனா நாட்டில் நடைபெறுகின்ற பாரம்பரிய திருமண வைபங்களில் சிவப்பு நிறமே பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில், சிவப்பு நிறமானது காதல், சந்தோசம், வெற்றி ஆகியவற்றினை குறிக்கின்றது. மேலும், திருமண நாளில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வீடுகளும் சிவப்பு நிறத்திலே அலங்கரிக்கப்படுகின்றதாம்.

 
۞۞ செக் குடியரசில் புதுமணத் தம்பதிகளை அரிசிக்குப் பதிலீடாக பட்டாணிகளாலேயே ஆசீர்வதிக்கின்றனராம்.
۞۞ மொரோக்கோ நாட்டுப் பெண்கள், தன் தூய்மை தன்மைக்காக  திருமண வைபத்திற்கு தயார்படுத்துவதற்கு முன்னர் பால் குளியலை மேற்கொள்கின்றனராம்.
۞۞ இந்துக்களின் பாரம்பரியத்தில்; திருமண நாளில் மழை பெய்வது நல் அதிர்ஷ்டமாகுமாம் என்ற நம்பிக்கையுண்டு.
۞۞ “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க”…!

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது.
அந்த பதினாறு செல்வங்களும் வருமாறு;
கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s