பிறக்க அருமையான நாடு : இந்தியாவுக்கு 66வது இடம்

இந்த ஆண்டில், பிறக்க அருமையான நாடு எது என்ற ஆய்வில், இந்தியா, 66வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை, சுவிட்சர்லாந்தும்; 75வது இடத்தை, பாகிஸ்தானும் பிடித்துள்ளன.

“தி எகானமிஸ்ட்’ என்ற, பன்னாட்டு நிறுவனத்தின் இணையதளம் சார்பில், சுகாதாரம், பாதுகாப்பு, செல்வ வளம், ஆரோக்கிய வாழ்வு போன்றவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டில் பிறக்க, உலகில் எது, அருமையான நாடு என்ற, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம்:


“பிறந்தால் இந்த நாட்டில் தான் பிறக்க வேண்டும்’ என்ற விருப்பத்தின் அளவில், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில், நாடுகள் தேர்வு செய்யப்பட்டன.இதில், இந்தியா, 66வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை, 63வது இடத்தையும், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகள், முறையே, 75 மற்றும் 77வது இடங்களில் உள்ளன. ஆப்ரிக்க நாடான, நைஜீரியா, 80வது இடத்தை பிடித்துள்ளது.

இது போன்றதொரு ஆய்வு, 1988ல் எடுக்கப்பட்ட போது, 13வது இடத்தை பிடித்த, சுவிட்சர்லாந்து, இந்த முறை முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை, ஆஸ்திரேலியாவும், அடுத்த இடங்களை, நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.ஆறாவது இடத்தை, சிங்கப்பூரும், எட்டாவது இடத்தை, நெதர்லாந்தும், ஒன்பதாவது இடத்தை கனடாவும், 10வது இடத்தை, ஹாங்காங்கும் பிடித்துள்ளன.

அமெரிக்காவும், ஜெர்மனியும், 16வது இடத்தில் உள்ளன.பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும், ஐரோப்பிய நாடுகளான, கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள், பட்டியலில் பின்தங்கியுள்ளன.சீனா, 49வது இடத்தையும், ரஷ்யா, 72வது இடத்தையும் பிடித்துள்ளன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s