மதுரையில் ஜனவரி 6-ல் “பராசக்தி’ திரைப்படத்தின் வைரவிழா

நடிகர் சிவாஜி கணேசன் அறிமுகமாகிய “பராசக்தி’ திரைப்படத்தின் வைரவிழா மதுரையில் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.

நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லம் சரஸ்வதி மஹாலில் விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்தி:

தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய பராசக்தி திரைப்படம் 1952-ல் வெளியானது. இத் திரைப்படத்தின் வைரவிழா ஆண்டு (1952 – 2012) நிறைவைக் குறிக்கும் வகையில், மதுரை மாநகர் மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பராசக்தி வைரவிழா நடத்தப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனமே சக்சஸ் என்பதுதான்.   அந்த வசனத்தின்படியே – பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக முடியும் என்ற நியதியை உடைத்தெறிந்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்தவர் சிவாஜி கணேசன்.

பராசக்திக்குப் பிறகு, பல வெற்றிப் படங்களை கொடுத்தார். பராசக்தி திரைப்படம் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாள்களைக் கடந்தும், 10 திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்தும், திருச்சி மற்றும் கொழும்பில் 200 நாள்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது.

ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான,  மதுரை தங்கம் திரையரங்கில் முதலில் திரையிடப்பட்ட திரைப்படமும், 100 நாள்களை கடந்து ஓடிய முதல் படமும் பராசக்தி என்பது குறிப்பிடத்தக்கது. கதை, வசனம் இசைத் தட்டாகவும், புத்தகமாகவும் வெளிவந்த முதல் சமூகப் படமும் இதுவே.

கொழும்பில் 294 நாள்களும், யாழ்ப்பாணத்தில் 116 நாள்களும் ஓடியது. வெளிநாட்டில் முதன்முதலில் வெள்ளிவிழா கண்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமை பராசக்திக்குதான் உண்டு. 2012-ல் மறுவெளியீட்டிலும் கர்ணன்  திரைப்படம் 150 நாள்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் பராசக்தி வைரவிழாவில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா உள்பட அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s