உறவு வலுப்பட என்ன செய்யலாம்

நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உள்ள நமது உறவு வலிமையாகவும், நல்ல படியாகவும் இருக்க சில வழிகள்.
  1. நண்பர்கள்/உறவினர்கள் திருமண நாள், பிறந்த நாளை குறித்துவைத்து கொள்ளுங்கள். Call செய்ய முடியாவிட்டாலும் ஒரு SMS லாவது ஒரு வாழ்த்து சொல்லுங்கள்.
  1. திபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் முடிந்தால் நேரில் அல்லது போனில் பேசுங்கள்.
  1. நண்பர்கள்/உறவினர்களின் நல்ல விஷயத்தில் கலந்துகொள்கின்றிர்கலோ இல்லையோ துக்க காரியத்தில் தவறாமை கலந்துகொள்ளுங்கள்.
  1. நண்பர்கள்/உறவினர்கள் நமது வீட்டிர்க்கு வந்தால் முதலில் டி.வி யை அனைத்துவையுங்கள்.
  1. நாம் அடுத்தவர் வீட்டுக்கு சென்றால் அவர்கள் டி.வி பார்த்தால் அவர்கள் பார்க்கும் நிகழ்சியை நீங்களும் பாருங்கள். உங்கள் விருப்பத்தை திணிக்காதிர்கள்.
  1. குழந்தை உள்ள வீட்டுக்கு சென்றால் பிஸ்கட், பழங்களும் வாங்கிசெல்லுங்கள்.
  1. நமது வீட்டிர்க்கு யாராவது எதாவது வாங்கிவந்தால் “அய்யோ ! இதை இங்கே யாரும் திங்கமாட்டாங்கலே” என்று சொல்லாதிர்கள்.
  1. முடித்தவரை வார இறுதி நாட்களில் மதியம் 2 TO 4 யார்வீட்டுக்கும் செல்லாதிர்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு ஒய்வு எடுக்கும் நேரம் அது.
  1. இரவு தங்க போவதாக இருந்தாலோ அல்லது சாப்பிடும் நேரத்தில் செல்ல வேண்டி இருந்தாள் அவர்களுக்கு போன் செய்துவிட்டு செல்லுங்கள்.
  1. நீங்கள் செல்லும் வீட்டில் திருமணமாகி சில மாதமான பெண் இருந்தால் “எதாவது விஷேஷம் உண்டா?” என கேட்காதிர்கள். அவர்கள் தாய்மை அடையவில்லை என்றால் அதை சொல்ல வருத்தபடலாம்.
  1. நண்பர்கள்/உறவினர்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க போகும் இடத்தில் “குழந்தை ஏன் கருப்பா இருக்கு, முடி ஏன் கொஞ்சமா இருக்கு, ஏன் அப்பா போல இல்லை , பெண் குழந்தைதானா?” என குடும்பத்தில் குண்டு வைக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்.
  1. நண்பர்கள்/உறவினர்களிடம் முடிந்த அளவு கடன் வாங்காதீர்கள்/ கொடுக்காதீர்கள்.
  1. நண்பர்கள்/உறவினர்களின் முன்பு குழந்தையை திட்டாதீர்கள் அவர் மனம் பாதிக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s