நிறைவான வாழ்வுக்கு நிறைய குடிப்போம்.

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை.
மேலும் தண்ணீர் பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும் …

தண்ணீரை மருந்தாக ( வாட்டர் தெரஃபி )பயன்படுத்தும் முறை.

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல் கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் போக போக சரியாகிவிடும்.

இந்த முறையை செய்யும் முன்பும், செய்த பின்பும் ஒரு மணி நேரத்திற்கு டீ அல்லது காபி போன்ற எதையும் குடிக்கவோ மற்றும் சாப்பிடவோ கூடாது. முன்தின இரவு எந்த வகையான போதை பொருள்களையும் பயன்படுத்தி இருக்க கூடாது

முதலில் 1.50 லிட்டர் தண்ணீர் அருந்த முடியாதவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, அதே நேரத்தில் சிறிய இடைவெளி விட்டும் குடிக்கலாம்.

தண்ணீர் மருத்துவத்தின் சில நன்மைகள்;
இதை சரியாக நாம் பின்பற்றினால்
1,முகம் பொழிவுபெரும்
2, உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும்
3, உடல் புத்துணர்வு பெரும்
4, ஜீரணசக்தி அதிகரிக்கும்
5, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
6, இரத்த அழுத்தம் நோய் நீங்கும்
7, சர்க்கரை வியாதி சரியாகும்
ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அளவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் உடலில் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணமாக இருக்கிறது.
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்.

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்தி குடிப்பது காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாந்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. எனவே ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
எவ்வித செலவும் இல்லாமல் சாதாரண தண்ணீர் குடிப்பதாலேயே பலவித நோய்களில் இருந்து காப்பாற்றலாம் என்கிறபோது, இதை ஏன் நாம் தினசரி பின்பற்றக்கூடாது? மது குடித்தால்தான் குடியைக் கெடுக்கும் என்பார்கள். ஆனால் தண்ணீர் குடித்தால் குடியை உயர்த்தும். எனவே தண்ணீரை நிறைய குடித்து, நிறைவான வாழ்வை பெறுவோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s