புதுவருடத்தில் உருவெடுக்கும் புதிய தொழில்நுட்பங்கள்.

எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அடியெடுத்துவைக்கவும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் காத்திருக்கின்றன.

இதில் சில தொழில்நுட்பங்கள் இன்னும் வதந்திகளாகவே நம்பப்படுகின்றன. ஆனால் வேறு சில ஏற்கனவே தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.

எப்படியிருந்தாலும் இவையனைத்தும் வரும் வருடத்தின் இறுதிக்கும் தன்னை முழுமை படுத்திக்கொள்ளும் என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

ஃபயர் ஃபாக்ஸின் மொபைல் இயங்குதளம்:

கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன்களுக்கான இயங்குதளத்தை உருவாக்கியுள்ளன. ஆனால் தலைசிறந்த ஃபயர் ஃபாக்ஸ் இயங்குதளம் தொடங்கினால் எப்படியிருக்கும்? இந்த முடிவு கண்டிப்பாக பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த இயங்குதளம் “ஃபயர் ஃபாக்ஸ் ஒஸ்” என அழைக்கப்படும். மேலும் இது HTML 5 போன்ற உயர்ரக கணினி மொழியைக்கூட ஏற்கக்கூடியதாக இருக்குமாம்.

மைக்ரோசாப்டின் சர்பேஸ் டேப்லெட் ப்ரோ:

பல சிறப்புகளைக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டேப்லெட் தனது ப்ரோ என்ற மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் புதுவருடத்தில் வரப்போகிறது.

இந்த சர்பேஸ் டேப்லெட் ஐ5 டூயல்-கோர் என்ற ப்ராசெசருடன் வரப்போகிறது. மேலும் இது எதிர்கால விண்டோஸ் பயன்பாட்டிற்கு நம்மை அழைத்துச்செல்லவிருக்கிறது.

அமேசான் கிண்டில் போன்:

வல்லுனர்கள் பார்வையில் இது வெறும் வதந்தியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இதில் எந்த உண்மைகளும் இருப்பதாகத்தெரியவில்லை என்கின்றனர் பலர்.

ஆனால் அமேசான் நிறுவனம் தனது கிண்டில் என்ற புத்தக படிப்பானின் விற்பனையில் சாதனை புரிந்ததையடுத்து போன் மற்றும் டேப்லெட் தயாரிப்பிலும் களமிரங்கப்போகிறது என்கிறது மற்றொரு தரப்பு. மேலும் இது, 5 அங்குல திரைகொண்ட சாம்சங்கின் கேலக்ஸி நோட் போன்ற வடிவமைப்பிலும் இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.

பொருத்திருந்துதான் பார்ப்போமே!

ஐபேட் மினி:

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களிலேயே அதிகம் விற்கப்படதா 8 அங்குல ஐபேடானது “ஐபேட் மினியாக” மறு உருவமெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது ஆப்பிள் சாதனங்களுக்கே உரித்தான அத்துனை சிறப்பம்சம்களையும் தன்னகத்தே கொண்டிருக்குமாம். இது கூகுள் நிறுவனத்தின் “நெக்ஸஸ் 7″ மற்றும் அமேசான் நிறுவனத்தின் “கிண்டில் ஃபயர்” ஆகியவற்றிற்கு போட்டியாக அமையப்போகிறது.

லீப் மோஷன்:

சாதாரண கணினியமைப்புகளில் இருந்த தொழில்நுட்ப உலகை மாற்றியமைத்ததில் முக்கியப்பங்கு “டேப்லெட்டை” சாரும். ஆனால் இந்த “லீப் மோஷன்” என்ற அமைப்பு கணினி சார் தொழில்நுட்பங்களை வேறொரு புதிய இடத்துக்கு எடுத்துச்செல்லும் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட முடியும்.

இது மனிதனின் கை அசைவுகளுக்கேற்ப செயல்படக்கூடியது. அதாவது நம் கைகள் 1/100 மிமீ என்ற தொலைவில் இருந்தாலும் தொடுதிரை அமைப்பு செய்கைகளை உணர்ந்து செயல்படக்கூடியது. இது 3D என்ற முறைமூலமும் செயல்படக்கூடியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s