பணிபுரியும் இடத்தில் பெண்களின் கவனத்திற்கு…..

 

இன்று பணிபுரியும் இடத்தில் உங்களுக்கும், சிலரும் கூட ஆண்களால் சில அனுபவங்களைப் பெற்றிருக்கலாம்; சிலர் சமாளித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதற்காக எல்லாம் வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் நிலையில் இன்றைய பெண்களும் இல்லை. பொருளாதார சூழ்நிலையும் இல்லை. சரி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப்பது எப்படி?

* ஆபாசமாக பேசுவது, பாட்டு பாடுவது, அருவருக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத புத்தகம் அல்லது படங்களை கொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுகளே. எனவே, இதுகுறித்து கவனமாக இருங்கள். உங்களிடம் இப்படி யாராவது நடந்து கொள்வதாக தெரிந்தால், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் விலகி இருங்கள்.

* சக ஆண் ஊழியர்கள் உங்கள் உடைகள், உடல், அழகு பற்றிப் பேசினால், முதல் பேச்சிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். அதை நீங்கள் ஏற்கும் பட்சத்தில், ஒருவேளை, பேச்சு மேலும் மேலும் தொடர்ந்து, ஒரு நாள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அல்லது அவற்றை நீங்கள் ஏற்கும் போது, சம்பந்தப்பட்ட நபரே அதற்கு நீண்ட நாக்கு, மூக்கு முளைத்து பூதமாக்கிவிடலாம். எனவே, இவற்றை ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்துக் கொள்ளாமல் சற்று உஷாராக இருங்கள்.

* சில பெண்கள் தாங்களாகவே, சில சங்கடங்களை உருவாக்கிக் கொள்வர். உதாரணமாக, ஜோவியல் பேர்வழி என்று கூறிக் கொண்டு வரையறை இன்றி, பல விஷயங்களைப் பற்றி சக ஆண் ஊழியர்களிடம் பேசும் போது, அவர்களும் அதற்கேற்றவாறு தங்கள் எல்லைகளை விரித்துக் கொள்ளலாம். அப்படி நீங்கள் பேசிவிட்டு அவர்களைக் குறை கூறுவதில் நியாயமில்லை. எனவே, நீங்கள் சக ஆண் அலுவலர்களிடம் பேசும் போது,அதற்கான வரையறையை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.

* இப்படியெல்லாம் நீங்கள் கவனமாக இருந்தும் பிரச்னை உங்களை தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட நபரிடம், அவரது செய்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தயங்காதீர்கள். அப்படியும் பிரச்னை தொடந்தால், உங்கள் உயரதிகாரியிடம் புகார் அளிக்க தயங்காதீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s