கைபேசியை இப்படியும் பயன்படுத்தலாம்

கைபேசி கேமரா பெரும்பாலும் தீய விஷயங்களுக்கு தான் பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக சொல்லப்படுவதுண்டு. அதற்காகவே கேமரா உள்ள கைபேசியை தடை செய்ய வேண்டும் என்று பேசிய மதவாதிகளும் உண்டு. ஆனால் அது நடக்கிற காரியமா? கத்தி எப்படி பழம் நறுக்கவும் மட்டுமல்லாமல் ஆளை வெட்டவும் பயன்படுகிறதோ – அது போல தான், எந்த விஷயமும் நல்லவற்றோடு, தீயவற்றுக்கும் பயனளிக்கிறது.

அதற்காக எந்த ஒரு பொருளையும் உபயோகப்படுத்தாமல் இருந்து விட முடியாது. அந்த வகையில் கைபேசி கேமராவை தகுந்த இடத்தில் பயன்படுத்தி காரியம் சாதித்து இருக்கிறார்கள் பேருந்து பயணிகள். பழைய செய்தி தான். வாசித்ததை பகிர்ந்து கொள்கிறேன் – எனது கருத்துகளுடன்.

“தங்கள் ஊருக்குள் நள்ளிரவில் செல்லமாட்டோம் என்று பேசிய பஸ் டிரைவர், கண்டக்டரின் பேச்சுகளை கைபேசியில் பதிவு செய்த பயணிகள், உயர்அதிகாரிகளிடத்தில் புகார் செய்வோம் ,’என, கூறியதால் ஊருக்குள் சென்று இறக்கி விட்டனர். திருச்சியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரவு 12.50க்கும் 1.10க்கும் இரண்டு பஸ்கள் புறப்படுகிறது. இந்த பஸ்கள் அதிகாலை 3 மணியளவில் சின்னக்கீரமங்கலம் வழியாக செல்லும் போது 2 கி.மீ.தூரமுள்ள திருவாடானைக்குள் செல்லாமல் ராமநாதபுரத்திற்கு சென்று விடுகிறது.

தினமும் திருவாடானையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சின்னக்கீரமங்கலத்தில் வலுக்கட்டாயாமாக இறக்கிவிடபடுகின்றனர். இதனால் பெண் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டு, அதிகாலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். திருவாடானைக்குள் அனைத்து பஸ்களும் சென்று வரவேண்டும் என்ற உத்தரவை மீறி செயல்படும் டிரைவர்களின் செயலால், பயணிகள் மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இதனிடையே, சம்பவத்தினத்தன்று வழக்கமாக பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சின்னக்கீரமங்கலம் வந்தவுடன் பயணிகளை இறங்குமாறு வற்புறுத்தினர். இதனால் பயணிகளுக்கும், டிரைவர் கண்டக்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “திருவாடானைக்குள் செல்லமாட்டோம், யாரிடம் வேண்டுமென்றாலும் போய் புகார் செய்து கொள்ளுங்கள்,’ என, டிரைவரும், கண்டக்டரும் பேசியதை பயணி ஒருவர் , கைபேசியில் பதிவு செய்தார்.

அவர்கள் பேசியதை அவர்களிடமே போட்டு காண்பித்து பயணிகள், உயர்அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என்றனர். இதை தொடர்ந்து பீதியடைந்து பயந்து போன டிரைவர் அனைத்து பயணிகளையும் திருவாடானைக்குள் சென்று இறக்கிவிட்டனர்” நிச்சயம் அந்த பயணியின் சமயோசித புத்தியை பாராட்ட வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் – தாம் பணிபுரிவது பொதுமக்களுக்காக என்பதை மறந்து விடுகின்றனர்.

அவர்கள் பொதுமக்களிடம் பேசும்போது பொறுப்புணர்வுடன் கண்ணியமாய் பேசுவது நல்லது. எங்கேனும் கேமரா இருக்கலாம். அதே நேரம் தம்​ பணியை பொறுப்புடன் நேர்மையாக செய்பவர்கள் பயப்பட தேவை இல்லை. பொதுமக்களும் கூட கவனமாக பேச வேண்டும். எப்படி தவறு செய்யும் அதிகாரிகள் படம் பிடிக்கப்படுகிறார்களோ அதிலியே அத்து மீறும் பொதுமக்களும் இருப்பார்கள்.

தம் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசுகிறார்கள் தங்கள் விற்பனையாளர்கள் என்பதை கண்காணிப்பு கேமரா மூலம் தலைமை பதவியில் இருப்போரும் பார்க்கின்றனர். லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரை இப்படி படம் பிடித்து மாட்ட வைத்த சம்பவமும் உள்ளது. கேமரா என்பது அந்தரங்க விஷயங்களை களவாடத்தான் செய்கிறது. திருவாடானை கிராமத்து மக்கள் கைபேசியால் ஒரு புரியோஜனமான வேலையை செய்திருக்கின்றனர். பாராட்டுவோம் அவர்களை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s