உலகின் மிகப் பெரிய பூ…… ஏழரை அடி உயரம்!!

 

பூக்களிலே மிகவும் உயரமான பூ எது தெரியுமா?

டைட்டன் ஆரம் எனப்படும் [Titan arum] கீழே படத்தில் உள்ள பூ தான்!

இதன் தாவரவியல் பெயர்: Amorphophallus titanum

இது சுமத்ரா தீவுகளைத் தாயகமாகக் கொண்டது.

சுவிட்சர்லாந்தின் பேசல் தாவரவியல் பூங்காவில் நவம்பர் 19, 2012 தேதி இது பூத்துள்ளது. ஏழரை அடி உயரம் வளர்ந்துள்ளது, இவை பத்தடி உயரம் வரை வளரக் கூடியவை.
“பூதான் பெரிசா இருக்கே, நம்ம ஊரு மல்லியப்பூ மாதிரி கம கம…. என்று ஆளையே தூக்கும்டா…” என்று நினைச்சுடாதீங்க, இது அழுகிய பிண நாத்தம் அடிக்குமாம்!! [யாருக்காவது தெரியுமா அந்த நாற்றம் எப்படி இருக்கும்னு…?!!] இது என்ன நாறினாலும் பரவாயில்லை, பார்த்தே தீருவோம்னு தூரத் தொலையிலிருந்து மக்காஸ் கூட்டம் கூட்டமாய் மூக்கை பிடித்துக் கொண்டே வந்து பாத்துட்டு போறாங்களாம்.
இள மொட்டாயிருந்து…..
பூவாகி ……….
மலர்ந்து விரிய 6 வருடங்கள் ஆனாலும் இரண்டே நாளில் வாடிப் போயிடுமாம்.
மலரும் தினத்திற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு பத்து செ.மீ. வரை வளருமாம் [1 மி.மீ வளர எட்டு நிமிடங்கள்], அதை ஆன்லைனில் இந்தம்மா கண்காணிப்பாங்களாம் !! நீங்க மூக்கை பிடிக்காமல் ஆன்லைனிலேயே பார்க்கலாமாம்!!
அதுசரி, எதுக்கு இது இப்படி நாரனும்… சீ…. வாசனை அடிக்கணும்? வேறெதுக்கு மகரந்தச் சேர்க்கை நடக்க விட்டில் பூச்சிகள், மற்றும் பல பூச்சியினங்களை ஈர்க்கத்தானாம்…….. நடுவில் உள்ள தண்டு ஒரே பூ இல்லை, இது தான் பூங்கொத்து. இதில் நூற்றுக் கணக்கில் பூக்கள் உள்ளன, அவை காய்களாக மாறும்.
மகரந்தச் சேர்க்கை அடைஞ்சதுக்கப்புறம் என்ன நடக்கும்? காயாகி பழம் பழுக்கும். [ஐயைய….. அத எவன் தின்பான்… உவ்வே…….] இதிலிருந்து சில மாதங்களுக்குப் பின்னர் நன்கு முதிர்ந்த விதைகள் கிடைக்குமாம். அதை போட்டா செடியா முளைச்சு வரும் அதை கண்ணாடி அறையில் [Green House] வச்சு வளர்ப்பாங்களாம், ஆறு வருஷம் கழிச்சு பூவாகுமாம் திரும்பவும் மூக்கைப் பிடித்துக் கொண்டே பார்க்க வேண்டுமாம்… ஐயோ தாங்கலைடா சாமி………………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s