ஆபிரகாம் லிங்கன்

அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்காக பாடுபட்ட உலகத்தலைவர்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றார்.
 
ஆபிரகாம் லிங்கன் சிறுவனாக இருந்த சமயம் ஒரு அறிஞரின் வரலாற்றுக்கதையை ஒருநாள் படித்துக் கொண்டிருந்தார்.அதில் ஒரு வாக்கியத்தை கண்டதும், அவர் மனம் அதில் நிலைத்துவிட்டது. “அடிமைத்தனம் என்ற ஒன்று இல்லையென்றால், உலகில் பாவச்செயல் என்ற ஒன்றுமே இல்லை”. அந்த ஒப்பரிய வாக்கியத்தை ஒருகாகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டார். அதனை தனக்குக் கிடைத்த பெருஞ் செல்வம் என்று கருதினார். அதை ஒரு புத்தகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். வறுமையின் காரணமாகச் சிறுவன் லிங்கனின் குடும்பம் வெளியூருக்குப் பிழைப்புத் தேடிச் சென்றது. வழியில் இரவு வந்துவிட்டதால் ஒரு இடத்தில் தங்கினர். இந்தப் பொன்மொழியை வைத்திருந்த புத்தகக் கட்டைச் சிறுவன் அருகில் வைத்துக் கொண்டு தூங்கினான். தலையணை இல்லாததால் அவனது தந்தைக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மகன் அருகில் இருந்த புத்தகக் கட்டை எடுத்துத் தலையணையாக வைத்துக் கொண்டு தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் விழித்த சிறுவன் புத்தகக் கட்டைக் காணாமல் பதறிப் போனான். சுற்றும் முற்றும் பார்த்தான். தந்தையின் தலைக்கடியில் தன் ஒப்பரிய செல்வம் இருப்பது கண்டு பதறிப் போனான். தந்தையின் தலையைத் தனது தொடையில் மாற்றி வைத்துக் கொண்டு புத்தகக் கட்டை உருவி எடுத்து விட்டான். அசதியாகத் தூங்கியதால் அதைத் தந்தை உணரவில்லை. காலையில் கண் விழித்த தந்தை மகனின் தொடை தன் தலையணை ஆகியிருப்பது கண்டு வியந்தார். சிறுவன் விபரம் கூறினான். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனின் இலட்சிய உணர்வு கண்டு, “அடிமைத்தனம் என்ற பாவ்ச்செயலை ஒழிக்கும் பணியில் வெற்றி பெறுவாய்”என்று வாழ்த்தினார். அதன் படியே ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்கும் தனது இலட்சியத்தில் வெற்றி கண்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s