மின் வெட்டு நேரம் எவ்வளவு? :மின் வாரியத்திற்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: “மாவட்டங்களில், எவ்வளவு நேரம் மின் வெட்டு உள்ளது என்கிற விவரங்களை, மின்வாரியம் அளிக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, சிட்டிசன் கார்டியன் என்கிற அமைப்பின் நிர்வாகி ரவிச்சந்திரன் என்பவர், தாக்ழகல் செய்த மனு:தமிழகத்தில் மின் வினியோகம் சரிவர இல்லை. மின் வெட்டு பிரச்னையை, மக்கள் அன்றாடம் சந்தித்து வருகின்றனர். குறைந்த அழுத்த மின்சாரம், அடிக்கடி மின் வெட்டு, மின் வினியோகத்தில் ஏற்ற, இறக்கம், இவற்றால், பொது மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.புதிய துணை மின் நிலையங்களை இயக்கவும், மின் மாற்றி திறனை அதிகரிக்கவும், குறைந்த அழுத்தம், உயர் அழுத்தத்துக்கான கேபிள்களை வலுப்படுத்தவும், கேபிள்களை பாதுகாக்கவும், மின்வாரியம், நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொதுநல மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில், பல மாவட்டங்களில் நிலவும், மின்சாரப் பிரச்னை குறித்து, நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:பல மாவட்டங்களில், சில மணி நேரம் மட்டுமே, மின் வினியோகம் இருப்பதாகவும், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், 12 மணி நேரத்துக்கும் மேல், மின் வினியோகம் இல்லை என்றும், எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.எனவே, மாவட்டங்களில், எவ்வளவு நேரம் மின் வினியோகம் இல்லை என்கிற முழு விவரங்கள் அடங்கிய மனுவை, மின் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மின் வெட்டு குறித்த தகவலை, முன்கூட்டியே, மீடியாக்கள் மூலம், ஏன் தெரிவிக்கவில்லை என்பதற்கும், விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.மனு மீதான விசாரணையை, டிசம்பர், 3ம் தேதிக்கு, “முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.

Thanks to : Dinamalar.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s