செல்போன் வாடிக்கையாளர்கள் *99# அழுத்தினால் வங்கி பேலன்ஸ் அறியலாம்

செல்போன் வாடிக்கையாளர்கள் இனி தங்கள் வங்கி கணக்கில் பேலன்ஸ் விவரத்தை தெரிந்து கொள்ள *99# என்பதை அழுத்தினால்போதும். வெளிநாடுகளில் புழக்கத்தில் இருக்கும் இந்த வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளது. செல்போன்களில் பேலன்சை தெரிந்து கொள்ள ஸ்டார், குறிப்பிட்ட எண் மற்றும் ஆஷ் குறியீட்டை அழுத்தினால் போதும். அடுத்த சில நிமிடங்களில் தகவல் வந்து சேரும். பெரும்பாலும் ஒரே எண்ணையே பல நிறுவனங்கள் இதற்கு பயன்படுத்துகின்றன.

இதேபோல், சர்வதேச அளவில் ஸ்டார், 99, ஆஷ் குறியீட்டை அழுத்தினால் வங்கி கணக்கு பற்றிய விவரம் தெரிய வரும். இந்த புதிய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வங்கிகள் இந்த எண்ணில் கணக்கு விவரங்களை தரும் சேவையை தொடங்கி உள்ளன. பெரும்பாலான வங்கிகள் விரைவில் இந்த வசதியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சேவையை சாதாரண ஜிஎஸ்எம் போன்களிலேயே பெறலாம் என்பதால், ஏழை மக்களும் பயனடைய முடியும்.

ஏற்கனவே கணக்கு எண் குறித்த தகவல்களை பதிவு செய்து வைத்திருப்பதன் மூலம், வங்கியின் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கு விவரத்தை செல்போன் நிறுவனங்கள் பெற்று தருகின்றன. இதற்காக எந்த கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. காசோலை விவரம், நிதி பரிமாற்றம், நிலுவைத் தொகை, செக் புத்தக தேவை உள்ளிட்ட சேவைகளை இந்த எண்ணை அழுத்தி பெற முடியும். விரைவில் இச்சேவை நாடு முழுவதும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s