காப்பி பேஸ்டா? சுஜாதாவின் அதிரடி பதில்கள்

நேற்றய தினம் சுஜாதா பற்றியும் அவருடைய சில நாவல்களின் தழுவல்கள் பற்றியும் அவை பற்றிய குற்ற சாட்டு பற்றியும் வெளியிட பட்ட பதிவுக்கு என்னை கிட்ட தட்ட சுஜாதாசிய குற்றவாளியாக்கி விட்டார்கள். இருந்தாலும் சுஜாதா மேல் இத்துணை அன்பு சாத்தியம் என்றால் கண்டிப்பாக அவருடைய
எழுத்துக்களின் வலிமையே அதற்க்கு வேராக நான் கருதுகிறேன்.

பதிவை வாசிக்காதவர்கள். கீழ் குறிப்பிட்ட லிங்க் மூலம் வாசித்து தொடருங்கள்.

சுஜாதாவின் காப்பி பேஸ்ட்

சுஜாதா 5 / 90 டிகிரி

குற்ற சாட்டுக்களும் சுஜாதாவின் பதிலும்

சொர்க்க தீவு நாவல் தொடர்கதையாக வந்த போது

  • ஒருவர் இது “ஜார்ஜ் ஆர்வெல்லின்” 1984 போல இருக்கிறதே?
  • இன்னொருவர் ஆல்டஸ் ஹக்சிலியின் “BRAVE NEW WORLD” போல இருக்கிறதே?
  • மற்றுமொருவர் ஐரா லெவினின் “THIS PERFECT DAY” போல இருக்கிறதே?

சுஜாதாவின் பதில்

  • நான் மேற்சொன்ன நாவல்களை எல்லாம் படிக்கவில்லை என்று சொல்வது சிறுபிள்ளை தனம். இவர்கள் சொல்வது போல நான் காப்பி அடிக்க வேண்டும் என்றால் ஒரு லைப்ரரியையே காப்பி அடித்து இருக்க வேண்டும். மேற்சொன்ன புத்தகங்கள் மட்டுமல்ல, நிறைய சயன்ஸ் பிக்சன் புத்தகங்கள் படித்து இருக்கிறேன். என் நண்பர்களுக்கு நான் சில ஆசிரியர்களை சிபாரிசு செய்கிறேன்.
  • பெரும்பாலும் எல்லா சயன்ஸ் பிக்சன் நாவல்களிலும் பொதுவான சில அம்சங்கள் இருக்கும்.

1. எதிர் காலத்தை பற்றி அவை சொல்லும்.

2. இன்றைய சமுக அமைப்புக்கு பதிலாக, மாறுதலாக ஒரு புதிய அமைப்பை அவற்றில் சொல்வார்கள்

3. அந்த புதிய அமைப்பு எதிராக ஒருவன் முயற்சி செய்வான்.

  • ஆனால் நான் படித்த நாவல்களின் பாதிப்பு சொர்க்க தீவில் இல்லவே இல்லை என்று சூடம் அணைத்து சத்தியம் பண்ணுவதற்கு நான் தயாராக இல்லை. நிச்சயம் இருக்கிறது. ஹக்சிளியின் போகொநோவோஸ்கி முறையை பற்றி ஒரு அத்தியாயத்திலே குறிப்பிட்டு இருக்கிறேன். லெவின் ஒரு வயது எல்லைக்கு பிறகு மக்கள் கொல்ல படுவதை தன புத்தகத்திலே சொல்லி இருப்பார்.

1984

அதித யுத்த பயத்தின் அடிப்படையில் பீடிக்கப்பட்ட ஜனங்கள் விழித்து கொண்டே வாழும் கேட்ட சொப்பனம் போல போன்ற வாழ்கையை பற்றியது. இதில் சரித்திரம் மாறி மாறி எழுதப்படுகிறது. இந்த அமைப்பை எதிர்தவனின் தோல்வியை பற்றியதே இந்த நாவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s