எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! (Story)

உலகம் சுற்றப் புறப்பட்ட இரு தேவதைகள் ஓரிரவு ஒரு பணக்காரன் வீட்டில் தங்க எண்ணினர்.அந்த வீட்டில் இருந்தவர்கள் வேண்டா வெறுப்பாக தேவதைகள் ஓட்டை உடைசல் போட்டு வைத்திருந்த ஒரு சிறு அறையில் தங்க இடம் தந்தனர்.கரடு முரடான தரையில் படுக்க வேண்டி இருந்தது. படுக்குமுன் அந்த அறையின் சுவரில் ஒரு ஓட்டை இருந்ததை அவர்கள் கண்டனர்.பெரிய தேவதை அந்த ஓட்டையை மூடிச் சரி செய்தது.சின்ன தேவதை ஏன் அப்படிச் செய்தாய் எனக் கேட்டது.பெரிய தேவதை எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனக் கூறியது.
மறுநாள் இரவு தேவதைகள் ஒரு ஏழை விவசாயியின் வீட்டில் தங்கினர். விவசாயியும் அவர் மனைவியும் இருந்த கொஞ்சம் உணவைப் பகிர்ந்து கொண்டனர்.தங்கள் படுக்கையை தேவதைகளுக்குக் கொடுத்தனர்.
மறுநாள் காலை விவசாயியும் அவன் மனைவியும் அழுது கொண்டி ருந்தனர்.ஏன் எனத் தேவதைகள் கேட்க அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பசு இறந்து விட்டது எனக் கூறினர்.
குட்டிதேவதை கோபமாகக் கேட்டது”பணக்காரனிடம் நிறைய செல்வம் இருக்கிறது .ஆனல் கருமியாக இருக்கிறான்;அவனுக்கு உதவி செய்தாய்; ஆனால் இவன் மிக நல்லவன்.பாவம் இவனிடம் இருந்த ஒரே சொத்து அவனது பசு.அதை இறக்க எப்படி அனுமதித்தாய்?”
பெரிய தேவதை சொன்னது”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
”பணக்காரன் வீட்டில் ஓட்டைக்குள் பெரிய புதையல் இருந்தது.அது அவன் கண்ணில் படாமல் நான் மறைத்து விட்டேன்.நேற்று இரவு எமன் விவசாயியின் மனைவியைக் கொண்டு போக வந்தான்.நான் பதிலாக பசுவைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து விட்டேன்”
வாழ்க்கையில் இப்படித்தான்;நாம் எதிர்பார்த்தபடி நிகழ்வுகள் நிகழாதபோது, நாம் நம்பிக்கையுடன் எண்ண வேண்டும் இவ்வாறு நடந்தது நம் நன்மைக்கே என.
எண்ணிப்பாருங்கள்:
இன்றிரவு உறக்கம் வராதபோது.வானமே கூரையாக வாழும் மனிதனை எண்ணிப் பாருங்கள்.
மகிழ்வுந்தில் செல்லும்போது நெரிசலில் சிக்கிக்கொண்டால் பொறுமை இழக்காமல், பேருந்தில் செல்லக் கூட வசதியில்லாத பலரை எண்ணிப் பாருங்கள்.
பணியிடத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால்,வேலையின்றித் தவிக்கும் இளைஞர்களை எண்ணிப் பாருங்கள்.
அன்புக்குரியவர்களுடன் உறவில் விரிசல் என்றால்,அன்பு செலுத்த ஆளில்லாத அபாக்கியவான்களை எண்ணிப்பாருங்கள்.
வார இறுதி மகிழ்ச்சியாகக்கழியவில்லையே என வருந்தும்போது,வாரத்தில் ஏழுநாட்களும்,ஒருநாளில் 12 மணிநேரம் சொற்ப ஊதியத்தில் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நபரை எண்ணிப்பாருங்கள்.
காதோரம் நரைத்த முடி கவலைப் படுத்தும்போது,முடியில்லாமல் போன புற்று நோய்க்காரரை எண்ணிப் பாருங்கள் .
மற்றவர்களின் வெறுப்பால்,அறியாமையால்,சிறுமதியால்,பயத்தால் நீங்கள் பாதிக்கப்படும்போது,எண்ணிப்பாருங்கள்,நிகழ்வு இன்னும் மோசமாக்கூட இருக்கலாம்;அவர்கள் இடத்தில் நீங்களாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s