தாக்கரேவின் நம்பிக்கைக்குரிய இஸ்லாமிய மருத்துவர்

வலதுசாரி தீவிரத் தலைவர் என்று முத்திரை குத்தப்பட்ட பால் தாக்கரே, தனக்கு நம்பிக்கைக்குரிய மருத்துவராக ஒரு இஸ்லாமியரையே வைத்துக் கொண்டார். கடந்த 4 வருடங்களாக அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மருத்துவராக இருப்பவர் டாக்டர் ஜலீல் பார்க்கர்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் இந்தச் செய்தியைக் கேள்விப் படுபவர்கள், பால் தாக்கரே எந்த நம்பிக்கையில் தனது ஒட்டு மொத்த குடும்பத்தின் நலனையும் இஸ்லாமிய மருத்துவர் ஒருவரின் கையில் ஒப்படைத்தார் என்பதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப, அந்த மருத்துவருக்கும் பால் தக்கரேவுக்குமான நம்பிக்கை பிணைப்பு எந்த நிலையிலும் தகர்ந்ததில்லை என்பதுதான்.

கடந்த 2009ல் பால் தக்கரேவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது, அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீக்கு அடிக்கடி வருகை தருபவர் ஆகிவிட்டார் ஜலீல் பார்க்கர். இதுவரை அவர்களுக்குள் மத ரீதியான எந்தப் பேச்சுவார்த்தையும் சூடான விவாதங்களும் எழுந்ததேயில்லை.  தாக்கரே பற்றிக் குறிப்பிடும் பார்க்கர், நான் சந்தித்ததிலேயே மிகவும் இளகிய மனதும் அன்பும் கொண்ட ஒரு ஆத்மா அவர் என்கிறார்.

86 வயதான பால் தாக்கரேவின் மறைவுச் செய்தியை கண்களில் நீர் துளிகளோடும் உடைந்த மனதோடும் அறிவித்தார் பார்க்கர், தான் அவரது அபிமான கட்சித்தொண்டனாக இல்லாதபோதும்!

கட்சித் தொண்டர்களும் பார்க்கரின் இருப்பை உணர்ந்து, அவரை தாக்கரேயுடனேயே இருக்க விரும்பினர். கடந்த வருடம் மும்பையில் சிவாஜி பார்க்கில் நடந்த தசரா ஊர்வலத்தில் தாக்கரே கலந்துகொண்டபோது, பார்க்கரும் உடனிருக்க வற்புறுத்தி அவரையும் இருக்க வைத்தனர்.

இவர்களின் உள்ளார்ந்த பிணைப்பைப் பார்த்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கட்சித் தொண்டர்களுடன் பொதுப்படையாகவே புகழ்ந்து பேசியிருக்கிறார்.

பால் தாக்கரேவுக்கு அடுத்து, அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் உடல் நலம் குன்றி இருந்தபோது, பார்க்கரின் தலைமையிலான மருத்துவர் குழுவினரே அவருக்கு மருத்துவம் செய்தனர். இப்போதும் அதுவே தொடர்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s