உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல

ரோஸ் ஒரு மூன்று வயது பெண் குழந்தை. அவள் எப்பொழுதும் தன தாயாருடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க பலசரக்கு கடைக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது ஒவ்வொருமுறையும் அந்த கடையில் உள்ள சாக்லேட் டப்பாவில் இருந்து தன்னுடைய சின்ன கை முழுவதும் சாக்லேட் எடுத்து சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் அந்த சிறு குழந்தைக்கு பிறந்த நாள் வந்தது. அன்று அந்த குழந்தை பலசரக்கு கடைக்கு செல்லும்போது தான் வீட்டில் வெட்டிய கேக் இன் ஒரு பகுதியை அந்த கடையின் முதலாளிக்கு கொடுத்து அவரிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றது. அப்பொழுது அந்த முதலாளி ரோஸ்சை பார்த்து நீ இன்று எடுத்துக்கொள்ளும் சாக்லேட்க்கு பணம் தரவேண்டியது இல்லை அது என்னுடைய பிறந்த நாள் பரிசு என்று கூறினார். ஆனால் ரோஸ் அன்று ஒரு சாக்லேட் கூட எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தாயும் அந்த முதலாளியும் எவ்வளவோ சொல்லியும் அந்த குழந்தை எடுத்துகொள்ள மறுத்துவிட்டது. உடனே அந்த முதலாளி தானே தன் கை நிறைய சாக்லேட் எடுத்து அந்த குட்டி பெண்ணிற்கு கொடுத்தார், அப்போது அந்த குழந்தையும் புன்சிரிப்போடு வாங்கிக்கொண்டது. அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு அந்த தாய் குழந்தையிடம் நீயாகவே ஏன் சாக்லேட் எடுத்து கொள்ளவில்லை என கேட்டார்கள் அதற்கு அந்த குழந்தை நானாக எடுத்திருந்தால் என் சின்ன கையில் கொஞ்சம் சாக்லேட் தான் எடுக்கமுடியும் ஆனால் அந்த முதலாளி கை பெரியது அதனால் அவராக எடுத்து கொடுக்கும் பொது நிறைய கிடைக்கும் அதனால் தான் நானாக எடுத்துக்கொள்ளவில்லை என்றது.

நண்பர்களே இந்த கதை நமக்கு கற்றுக்கொடுக்கும் செய்தி என்ன தெரியுமா?

கடவுளிடம் நமக்கு வேண்டியதை நாமே கேட்டுப் பெரும்போது நமக்கு கிடைப்பது குறைவாகவே இருக்கும், அதுவே அவருடைய விருப்பத்திற்கு விடும்போது நமக்கு கிடைப்பது நாம் எதிர்பார்த்ததுக்கும் மேலானதாகவே இருக்கும். இதனை தான் கடவுள் உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல, என் நினைவுகள் உன் நினைவுகளை விட மேலானது எனக் கூறுகிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s