இதயம் நன்றி சொல்லும்! – எப்பொழுது?

நெஞ்சு வலி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு அது மிக அதிகமாகவும், சிலருக்கு மிகக் குறைவாகவும் காணப்படும்.

நெஞ்சுவலியின் அளவைப் பொருத்து நோயின் தீவிரத்தை கணிக்க முடியாது. ஒரு சிலரோ ஒன்றுமே பிரச்னை இல்லாதபோதும் அதிகமான நெஞ்சுவலி உணருவார்கள். சிலருக்கு பிரச்னை பெரிதாகவும் அறிகுறிகள் மிகக் குறைவாகவும் இருக்கும். நீங்கள் கூறும் அறிகுறிகளைப் பொருத்துத்தான் மருத்துவர் அதற்கான பரிசோதனைகளை பரிந்துரைப்பார்.

உங்கள் மருத்துவர் நோய் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். அவர் கேட்காத போதும் நீங்கள் உணரும் வலியினை துல்லியமாக கணித்து அவரிடம் விவரிக்க வேண்டும். அதாவது நெஞ்சு வலி ஒரே இடத்தில் மட்டும் உள்ளதா? ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகின்றதா? எந்த நேரங்களில் இருக்கிறது? ஓய்வெடுத்தால் சரியாகிவிடுகிறதா (அ) மாறுபடுகிறதா? மிதமாக வலிக்கிறதா அல்லது தீவிரமாக தொடர்ந்து வலிக்கிறதா? என்ற கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும்.

 

மார்பு வலி ஏற்படக் காரணம் என்ன? பொதுவாக ஒவ்வொரு இதய நோய்க்கும் ஒவ்வொரு விதமான மாறுபட்ட அறிகுறிகள் தோன்றும். சுத்தமான இரத்தம் இதயத்திற்கு வருவது தடைபடுவதால் இதயத்தசைகள் பகுதியாகவோ (அ) முழுவதுமாகவோ இயங்காததால் மாரடைப்பு ஏற்படுகிறது. தீவிரமான நெஞ்சு வலி, உயர் இரத்த அழுத்தம், மேலும் வலி இடது தோள் மற்றும் கை, தாடை, பற்கள் போன்றவற்றுக்கும் பரவுதல் ஆகியவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.

ஆண்களுக்கு மார்புக்கு நடுவில் பாரம் மற்றும் அழுத்தத்தை உணர முடியும். அதேபோல் பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு விட முடியாமல் திணறுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம், தலைவலி ஆகியவை அனைத்தும் ஏற்பட்டு அசெüகரியத்தை உணருவார்கள்.

இதய நோயின் வகைகள்: “ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ என்ற இதய நோய், இதயத்துக்கு வரும் ஆக்ஸிஜன் தற்காலிகமாக தடைபட்டு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் ஏற்படுகிறது. உடற்பயிற்சிக்குப் பின் நெஞ்சு வலி ஏற்படுவது,

மேலும் மன அழுத்தத்தின் போது மூச்சுத் திணறல், இதய அழுத்தம், மற்றும் பாரமாக இருப்பது, தலைவலி, நெஞ்செரிச்சல், அதிகம் வியர்த்து கொட்டுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதயத்தின் இரத்த ஓட்டம் தடைபடுவதால் உருவாகும் தொடர் நெஞ்சு வலி காரணமாக “வேசோஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா’ எனும் இதய நோய் ஏற்படுகிறது. இது முக்கியமாக இரவில் ஏற்பட்டு தூங்க முடியாமல் செய்துவிடும்.

மேல்கூறிய அறிகுறிகளை கேட்டறிந்த மருத்துவர் மேலும் சில உடல் பரிசோதனைகள் செய்த பிறகு இதய நோயை உறுதிப்படுத்துவார்.

அதாவது முதலில் நோயாளியின் உதடு மற்றும் நகங்களில் நீல நிற மாற்றம் தோன்றினால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாகியிருக்கும். மேலும் தொடும்போது உடல் குளிர்ந்தோ, சூடாகவோ இருக்கிறதா என்று பார்ப்பார். மேலும் கால்மூட்டுகளில் வீக்கம் இருந்தால் அந்த இடங்களில் சரியான இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கலாம். நாடித்துடிப்பில் மாற்றம் உள்ளதா என்றெல்லாம் பரிசோதிப்பார்.

மேலும் மருத்துவரால் தனது ஸ்டெதஸ்கோப்பின் மூலம் இதயத்தின் துடிப்பு மற்றும் ரிதம் வைத்து எந்த வகையான இதய நோய் என்பதைக் கண்டறிய முடியும். இதயத்துடிப்பு வேகமாக உள்ளதா அல்லது மெதுவாக தடைபட்டுக் கேட்கிறதா, இடைவெளி சரியாக இருக்கிறதா என்பதை வைத்து நோய் இதயத்தின் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதாவது இதயத் தசைகளிலா அல்லது இரத்தக் குழாய்களிலா என்பதைக் கூற முடியும்.

இதய இரத்த ஓட்டம் மூலம்…பொதுவாக இதயத்தில் இரத்த ஓட்டம் சத்தமில்லாமல் இருக்கும். ஆனால் அது ஷ் ஷ்…….. என்ற சத்தத்துடன் அடங்காமல் இரைச்சல் அதிகமாக இருந்தால் இரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டு இரத்தம் இதயத்துக்கு வராமல் பின்னோக்கிப் போகிறது என்று கணிக்கலாம். காரணம் இதயம் சுருங்கும்போது இரத்த பரிமாற்றம் இடது ஏட்ரியம் மற்றும் கீழறைக்குமிடையே சரிவர நடைபெறவில்லை எனக் கொள்ளலாம். இதய ஓலி முறையற்றும், வலியுடனும் இருந்தால் தமனிகளில் கடினமான பிளேக் எனும் கொழுப்பு அடைபட்டிருப்பதாகக் கொள்ள வேண்டும்.

மேலே கூறிய சோதனைகளைப் பொருத்து மருத்துவர் அதற்கேற்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பார். பெரும்பாலானவை ஊசி துளைக்காதவை. அதாவது ஊசி துளைக்காத பரிசோதனைகள் } வலி மற்றும் அபாயமற்றது. உஇஏஞ, 3ஈஇஇஎ (ஆஞ்சியோ கார்ட்டோகிராம்) போன்ற சோதனைகளுக்கு ஆக்ஸிமெட் மருத்துவமனையில் தங்கும் அவசியமில்லை. தற்காப்பு காரணமாக இதுபோல் சோதனைகளை நோய்வருமுன் செய்து நாம் நன்றாக இருக்கிறோமா என்று தெரிந்து கொள்வது நல்லது.

உலக இதய தினத்தை (செப்.29) முன்னிட்டு ஆக்ஸிமெட் மருத்துவமனையில் இதய மருத்துவப் பரிசோதனைகளை முன்பதிவு செய்யும் முதல் 500 நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

இந்த சலுகை குறுகிய காலம் மட்டுமே. முன்பதிவு செய்யவும், மேலும் விவரங்கள் அறியவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

ஆக்ஸிமெட் மருத்துவமனை,

786, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-600035.

தொ.பே.: 42131010/1014/1016

 

Thanks To : dinamani.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s